கல்வி சுற்றுலா தொடர்பில் புதிய கட்டுப்பாடு !

breaking

கல்வி சுற்றுலா தொடர்பில் புதிய கட்டுப்பாடுகளை விதிக்க கல்வியமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

இதற்கமைய நாள் ஒன்றுக்கு மாணவர்களை சுற்றுலாவுக்கு அழைத்து செல்லக்கூடிய அதிகபட்ச தூரம் 100 கிலோமீட்டராக வரையறுக்க கல்வியமைச்சு தீர்மானித்துள்ளது.

எதிர்காலத்தில் பாடசாலை மாணவர்கள் மேற்கொள்ளும் கல்விப் பயணங்களுக்கு தெரிவு செய்யப்பட்ட பகுதிகள் தொடர்பிலும் அதிக கவனம் செலுத்தப்படவுள்ளது.

புதிய அறிவுறுத்தல்கள் அடங்கிய சுற்றறிக்கையை அனைத்து பாடசாலைகளுக்கும் கல்வி அதிகாரிகளுக்கும் உடனடியாக வழங்க கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

ேலும், கல்விச் சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்லப்படும் மாணவர்களை மாலை 6 மணிக்கு முன் அந்தந்த பாடசாலைகளுக்கு அழைத்து வர வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.