வவுனியா இரத்த வங்கியில் ஏற்பட்ட குருதி தட்டுப்பாடு ! பிரதேச செயலகம் அதிரடி நடவடிக்கை ;

breaking

வட தமிழீழம் ;- 

வவுனியா வைத்தியசாலையில் உள்ள இரத்த வங்கியில் ஏற்பட்டுள்ள குருதி தட்டுப்பாட்டையடுத்து வவுனியா பிரதேச செயலகத்தால் குருதி கொடை வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.

வவுனியா பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நேற்று (14.09) இந்நிகழ்வு இடம்பெற்றது.

வவுனியா வைத்தியசாலையில் சில வகை குருதிகளுக்கு தட்டுப்பாடு காணப்படுகின்றது. இந்நிலையில் இவ்வகையான குருதிகளை வைத்தியசாலைக்கு வழங்கும் செயற்பாட்டை வவுனியா பிரதேச செயலகம் முன் மாதிரியாக முன்னெடுத்திருந்தது.

இதன்போது வவுனியா பிரசே செயலாளர் நா.கமலதாசன் குருதி கொடை வழங்கி நிகழ்வை ஆரம்பித்து வைத்ததுடன், குறித்த பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் உத்தியோகத்தர்கள், கிராம அலுவலர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள், ஊடகவியலாளர்கள், இளைஞர்கள் எனப் பலரும் தாமாக முன் வந்து குருதியினை வழங்கியிருந்தனர்.

இதன்போது குருதிக் கொடையாளர்களுக்கு வெளிச்சம் அறக்கட்டளையின் நிதி உதவியில் மரக்கன்றுகளும் பிரதேச செயலாளர் நா.கமலதாசன் மற்றும் உதவிப் பிரதேச செயலாளர் திருமதி ச.பிரியதர்சினி ஆகியோரால் வழங்கி வைக்கப்பட்டது.