தாண்டியடி மாவீரர் துயிலும் இல்லலத்தில் நடைபெற்ற தமிழீழத் தேசிய மாவீரர் நாள் நினைவேந்தல்

breaking

தென் தமிழீழம் ;-

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் தங்களது இன்னுயிர்களை ஆகுதியாக்கிய மாவீரர்களை நினைவுகூரும் மாவீரர் நாள் நிகழ்வு . மட்டக்களப்பு தாண்டியடி துயிலும் இல்லத்தில் மாவீரர்களின் பெற்றோர்கள் உறவினர்கள், பொது மக்கள் என பெருந்திரளானவர்கள் உணர்வுபூர்வமாக ஒன்று திரண்டு உயரிய இலட்சியத்திற்காக தங்களின் இன்னுயிர்களை தியாகம் செய்தவர்களுக்கு நினைவேந்தினார்கள். 

  தாண்டியடி துயிலும் இல்லத்தில் இரண்டு மாவீரரின் தந்தையார் “கந்தசாமி”  பொதுச்சுடர் ஏற்றினார். தொடர்ந்து  பொதுமக்கள் மாவீர்ரகளின் பெற்றோர் கலந்துகொண்டு தீபங்களை ஏற்றி நினைவேந்தினார்கள்.