குருவிட்ட பகுதியில் போலி தங்க நாணய குற்றிகளை விற்பனை செய்ய முற்பட்ட இளைஞனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இவ்வாறு கைதுசெய்யப்பட்ட 19 வயதுடைய இளைஞன் அவிசாவளை பகுதியைச் சேர்ந்தவர் ஆவார்.
நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது சந்தேக நபரிடம் இருந்து 2 கிலோ கிராம் நிறையுடைய 960 போலி தங்க நாணய குற்றிகள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர் 6 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான தங்க நாணய குற்றிகளை விற்பனை செய்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.